உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...

கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். அவர்களை மீட்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ்.

மனோகரன் அறக்கட்டளை இலவச பயிற்சி மையம்

பள்ளி மாணவர்களுக்கு, இலவச கோடைகாலப் பயிற்சி முகாம் மே 1 முதல் 12ம் தேதி வரை வழங்கப்படுகிறது. முகாமில், பாட்டு, கவிதை, பேச்சு, யோகா, தியானம், பொது அறிவு, சொற்பொழிவு, பாடல், சுலோகம், ஓவியம், ஸ்போக்கன் இங்கிலீஷ், புதிர் கணக்குகள், விளையாட்டு, காகித வேலைப்பாடு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, முதலுதவி, அறிவியல் செயல்பாடுகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகவரி: பகத்சிங் நகர், பெரியநாயக்கன்பாளையம். தொடர்புக்கு: 95973 -88006, 99524- 97709.

ஸ்ரீ சாய் பெனிக்ஸ் பைன் ஆர்ட்ஸ்

டான்ஸ், ஆர்ட் அண்ட் கிராப்ட், அபாக்கஸ், யோகா, ஹேண்ட் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ், லிட்டில் செப் டே, பப்பட் ஷோ, லிட்டில் ஸ்டோரிடைம், பெயின்ட் டாட்டூ, பாட் பெயின்டிங், ரோலர் ஸ்கேட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகவரி: செல்லாண்டியம்மன் கோவில் வீதி, சிங்காநல்லூர். தொடர்புக்கு: 75025- 33476, 95973 -57837.

என்.எம். மெட்ரிக் பள்ளி

கராத்தே, ஜூடோ, லைப் ஸ்கில் ஆக்டிவிட்டிஸ், பன் கேம்ஸ் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகவரி: நீலிக்கோணாம்பாளையம், தொடர்புக்கு: 93603 -23055.

மோகன்ஸ் அகாடமி

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே 1 முதல் 20ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது. முகவரி: பி.டி. காக்காபாளையம் சாலை, அன்னூர். தொடர்புக்கு: 98945- 74112, 98422- 60112.

ஜீனியஸ் அபாகஸ்

ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: நால்வர் நகர், வடவள்ளி. தொடர்புக்கு: 99523- 26850.

ஜெ.ஜெ. இன்ஸ்டிட்யூட்

ஸ்போக்கன் ஹிந்தி, இங்கிலீஷ், ஹிந்தி சபா தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: அன்ந்தயா என்கிளேவ், துடியலூர். தொடர்புக்கு: 97905- 90432, 98659 -03884.

பவர் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ்

இலவசமாக கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். முகவரி: முல்லை நகர், வடவள்ளி. தொடர்புக்கு: 96009 -54808, 93420 -67909.

சிந்தியா தட்டச்சு பயிற்சி மையம்

தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுப் பயிற்சி வழங்கப்படுகின்றன. முகவரி: வீரகேரளம் சாலை, வடவள்ளி. தொடர்புக்கு: 98426- 10349.

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி

ஆறு வயதுக்கு மேற்பட்டோருக்கான கோடைக்கால தடகளப்பயிற்சி முகாம் கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நேரு ஸ்டேடியம், பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கல்வி குழுமம், கொடிசியா, நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. தொடர்புக்கு: 94871 17356.

படிக்கலாம், நடிக்கலாம்

இந்த கோடையில் 8-12வயது வரையிலான குழந்தைகளின் தமிழ் பேச்சுத்திறனை வளர்க்க, 'படிக்கலாம் நடிக்கலாம்' என்ற பெயரில் சிறுவர் நாடக பயிற்சி முகாம் ஒரு மாதம் நடக்கிறது. நடைபெறும் இடம்: வடவள்ளி, நியூ கோல்டன் நகரில் உள்ள ஸ்ரீ தக்சா அத்வ்யா. தொடர்புக்கு: 72001 66607.

சாய் டேக்வாண்டோ அகாடமி

குனியமுத்துார், வடவள்ளி ஆகிய இடங்களில் உள்ள சாய் டேக்வாண்டோ அகாடமியில், 6 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 95857 53373.

டி.எஸ். ஸ்போர்ட்ஸ் அகாடமி

ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு தெலுங்குபாளையம் டி.எஸ்.ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கிரிக்கெட், கால்பந்து, ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தொடர்புக்கு: 96778 83627.

ஸ்போர்ட்ஸ் கிளைம்பிங் பயிற்சி

கிளைம்ப் ஆன் சார்பில் ஜூன் 1ம் தேதி வரை ஸ்போர்ட் கிளைம்பிங் பயிற்சி வகுப்புகள் காளப்பட்டி ரோடு சி.எம்.ஐ.எஸ்., பள்ளி மற்றும் கிளைம்ப் ஆன் பயிற்சி மையங்களில் நடக்கின்றன. இதில் 7 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்லாம். தொடர்புக்கு: 95859 82431.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை