உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விற்பனை விலையில் இந்த வாரம் மாற்றமில்லை

இளநீர் விற்பனை விலையில் இந்த வாரம் மாற்றமில்லை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இன்றி, 37 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 14,750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தற்போது, வடமாநிலங்களில் இளநீரின் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும், இளநீர் வரத்து மிகவும் குறைந்து வருவதால் வட மாநிலங்களுக்கு தேவையான இளநீரை அனுப்ப முடிவதில்லை.இளநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பொள்ளாச்சி பகுதியில் இளநீரின் தரம் நன்றாக உள்ளது. தரமான இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ