உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருணாநிதி ஆட்சியிலும் கள்ளச்சாராயம் இருந்தது

கருணாநிதி ஆட்சியிலும் கள்ளச்சாராயம் இருந்தது

கோவை;கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய மரணங்களைக் கண்டித்து, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே, தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் முத்துசாமி ஆகியோரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், சி.பி.ஐ., விசாரணை கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, தொழிற்சங்க பேரவை மாநில துணைத்தலைவர் சக்திவேல் பேசியதாவது:எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, டாஸ்மாக்கை மூட வலியுறுத்தியும், கள்ளச்சாராய மரணங்களைக் கண்டித்தும், ஸ்டாலின் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்தவர், தற்போது எதையும் நிறைவேற்றவில்லை. விழுப்புரம் கள்ளச்சாராய மரணங்களின்போது, அடியோடு ஒழிக்கப்படும் எனக் கூறிய, முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன சொல்லப் போகிறார்?கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் அதுவும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் அருகில் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளனர். தி.மு.க.,வினர் ஆதரவின்றி இது நடைபெறாது.இது குறித்து கேட்டால், முந்தைய இ.பி.எஸ்., ஆட்சியிலும் இது நடைபெற்றது என்கிறார். கருணாநிதி ஆட்சிக் காலத்திலும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டதை, ஸ்டாலின் மறந்து விட்டாரா?கள்ளக்குறிச்சி விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். தவறுகளுக்குப் பொறுப்பேற்று முதல்வரும், துறை அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.திரைப்பட இயக்குனர் ஈஸ்வரன், தே.மு.தி.க., மாநகர் மாவட்ட செயலாளர் சந்துரு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகன், விஜயகாந்த் மன்ற துணை மாநில செயலாளர் கிட்டு உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ