உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த மாதமும் இல்லை பருப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பு

இந்த மாதமும் இல்லை பருப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பு ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பு

கோவை:ரேஷனில் இந்த மாதமும் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை என, ரேஷன் கார்டுதாரர்கள் வெறுப்பில் உள்ளனர்.கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக மாதம் தோறும் அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த மாதம் பருப்பு, பாமாயில் பல கார்டுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த மாதம் இதுவரை பருப்பு வழங்கப்படவில்லை என, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகையில், 'இந்த மாதம் வழங்க வேண்டிய பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், முந்தைய மாதமே சப்ளை செய்வது வழக்கம். ஜூலை மாதம் குறைவாகதான் பருப்பு, பாமாயில் சப்ளை செய்யப்பட்டது. இந்த மாதம் வழங்க வேண்டிய பருப்பு இன்னும் வரவில்லை. கடந்த மாதம் வாங்காதவர்களுக்கும், இந்த மாதம் கொடுக்க வேண்டி உள்ளது' என்றனர். இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா கூறுகையில், ''பாமாயில் பெரும்பாலான கார்டுகளுக்கு இந்த மாதம் வழங்கப்பட்டு விட்டது. இந்த மாதம் வழங்க வேண்டிய பருப்பு, இப்போதுதான் வந்துள்ளது.இன்னும் இரண்டு நாட்களில் எல்லா கடைகளுக்கும் சப்ளை செய்யப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி