உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேன் கூட்டில் கல் எறிந்ததால் விபரீதம்

தேன் கூட்டில் கல் எறிந்ததால் விபரீதம்

ஆனைமலை : ஆனைமலை அருகே, சுற்றுலா வந்த கல்லுாரி மாணவர்கள், தேன் கூட்டின் மீது கல் எறிந்ததால், தேனீ கொட்டி, 15 மாணவர்கள் பாதித்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை திருநகர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், 150 பேர், துணை முதல்வர் மினி தலைமையில், மூன்று பஸ்களில், திருமூர்த்திமலைக்கு வந்தனர்.அங்கு இருந்து, ஆழியாறு பூங்காவிற்கு வந்த மாணவர்கள், தேன் கூட்டை புகைப்படம் எடுத்ததுடன், அதன் மீது கல் எறிந்தனர்.தேன் கூடு கலைந்து, பறந்து வந்த தேனீகள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகளை சூழ்ந்தது. தேனீ கொட்டியதில், 15 மாணவர்கள் பாதித்தனர். ஆம்புலன்சில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து, ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ