உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

கல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கனிமவள கற்கள் எடுத்துச் சென்ற, டிப்பர் லாரியை கனிமவளத் துறையினர் சிறை பிடித்தனர்.கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில், நேற்று கோவை கனிமவளத் துறையினர் ஆவணங்கள் இன்றி கனிமவள கற்கள் கொண்டு செல்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இதில், நெ.10.முத்தூர் பகுதியில் டிப்பர் லாரியில் உரிய ஆவணம் இன்றி, 3 யூனிட் கனிம வள கற்கள் எடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்த பொட்டையாண்டிபுரம்பை சேர்ந்த சக்திவேல், 35, மீது கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில், போலீசார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், டிப்பர் லாரியை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி