உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுப்ரமணியசுவாமிக்கு  திருக்கல்யாண உற்சவம் 

சுப்ரமணியசுவாமிக்கு  திருக்கல்யாண உற்சவம் 

பொள்ளாச்சி;அம்பராம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில், பங்குனி உத்திரத்தையொட்டிஸ்ரீ வள்ளி, ஸ்ரீதேவசேனா சமமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.விழாவையொட்டி நேற்று காலை மங்கள இசை, மஹா சங்கல்பம், ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி, ஸ்ரீதேவசேனா சமேத சுப்ரமணியர் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று மாலை, சுப்ரமணியர், திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை