உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமிர்தா பல்கலையில் பிஎச்.டி., விண்ணப்பிக்க இன்றே கடைசி

அமிர்தா பல்கலையில் பிஎச்.டி., விண்ணப்பிக்க இன்றே கடைசி

கோவை;அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பல்கலையில், பிஎச்.டி., ஆராய்ச்சிப்படிப்பு சேர்க்கைக்கான கடைசி தேதி, இன்றுடன் நிறைவடைகிறது.இது குறித்து, அமிர்தா பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:அமிர்தா விஷ்வ வித்யாபீடம் ஆண்டுதோறும் சுமார் 7 கோடிக்கும் மேற்பட்ட உதவித்தொகையை பிஎச்.டி., ஆராய்ச்சியாளர்களுக்கு, மாதம் ரூ.35,000 வீதம் வழங்குகிறது.இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டிங், கலை, மனிதநேயம், வர்த்தகம், இயற்பியல் அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, வாழ்க்கை அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியல் போன்ற துறைகளில், ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குகிறது.பிஎச்.டி., ஆராய்ச்சிப்படிப்புக்கு, புகழ்பெற்ற உலகளாவிய விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெறுகின்றனர்.பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அமராவதி, அமிர்தபுரி, பெங்களூரு, கோயமுத்தூர், சென்னை, கொச்சி, மைசூர் மற்றும் பரிதாபாத் ஆகிய இடங்களில் உள்ள, அமிர்தா வளாகங்களில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கலாம். முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீதம் தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 'நெட்' மற்றும் 'கேட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எழுத்துத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, நேரடி நேர்காணலுக்குத் தகுதிபெறுகின்றனர்.அமிர்தா விஷ்வ வித்யாபீடம், பகுதி --1 முனைவர் சேர்க்கை, இன்றுடன் நிறைவடைகிறது. www.amrita.edu/phd என்ற இணையம் வாயிலாகவும், amrita.edu என்ற இ-மெயிலுக்கும் அனுப்பலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ