உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆலய பொன்விழா

ரேஸ்கோர்ஸ், நிர்மலா கல்லுாரி எதிரே அமைந்துள்ள, சத்ய நாராயணாய ஆலய பொன் விழா மற்றும் கருடாழ்வார் பிரதிஷ்டாபிஷேக விழா நடக்கிறது. காலை, 4:00 முதல் 6:00 மணிக்குள், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, கருடாழ்வார் பிரதிஷ்டாபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.

கும்பாபிஷேக விழா

கணேசபுரம் போலீஸ் கந்தசாமி வீதியில், முனியப்ப சுவாமி, வனபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 8:00 முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள், விமான கலச ஊர்வலம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.

உயர்ந்த பக்தி எது?

டெவ்ரி( Deffree) இன்ஜினியரிங் சார்பில், ராம்நகர், சத்தியமூர்த்தி ரோடு, ராம்லட்சுமி ஹாலில், மாலை,6:30 மணிக்கு, அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதை நடக்கிறது. ரகுநாத்தாஸ் மஹராஜ், உயர்ந்த பக்தி எது ? என்ற தலைப்பில், ஹரிகதையை வழங்குகிறார்.

கண்ணதாசன் விழா

கண்ணதாசன் கழகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 17ம் ஆண்டு கண்ணதாசன் விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில், மாலை, 6:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. கவிஞர்கள் பழநி பாரதி, வெண்ணிலாவிற்கு, கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.

இலக்கிய சந்திப்பு

'புலம்' தமிழ் இலக்கியப் பலகை சார்பில், திறனாய்வரங்கம் நடக்கிறது. காந்திபூங்கா, மாரண்ண கவுடர் உயர்நிலைப் பள்ளியில், காலை,10:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்று சிறுகதைத்தொகுப்பு குறித்து திறனாய்வுரை வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பலர் கலந்துகொள்கின்றனர்.

கர்நாடக இசை நிகழ்ச்சி

பாரதீய வித்யா பவன் சார்பில், மியூசிக் டிரினிட்டி எனும் தலைப்பில கர்நாடக இசை நிகழ்ச்சி மற்றும் புரந்தரதாசர் ஆராதனை நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில், மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. கலைஞர் பேபி ஸ்ரீராம் மற்றும் குழுவினரின் இசை கச்சேரி நடக்கிறது.

சுயமுன்னேற்ற பயிலரங்கு

திருப்புமுனை பயிற்சி அமைப்பு சார்பில், 'உன் வாழ்க்கை உன் கையில்' சுயமுன்னேற்ற பயிலரங்கம் நடக்கிறது. பி.என்.புதுார், அறிவுத்திருக்கோவில் ஆன்மிக அறக்கட்டளை மையத்தில், காலை, 10:30 மணிக்கு நிகழ்வு துவங்குகிறது. அனைவரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

அமைதியின் அனுபவம்

தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. * குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.

கண் பரிசோதனை முகாம்

கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை, அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றனர். பன்னிமடை, அரசு மேல்நிலைப்பள்ளியில், காலை, 8:30 முதல் மதியம், 1:30 மணி வரை முகாம் நடக்கிறது.* கோவை மசானிக் லாட்ஜ் சேவை அமைப்பு, இருகூர் கன்னிகா அறக்கட்டளை, மோசஸ் ஞானாபரணம் கண் மருத்துவமனை இணைந்து, கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. சாமாளபுரம், மங்கலம் ரோடு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை, முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ