உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணியூர் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு

கணியூர் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு

கருமத்தம்பட்டி;தேசிய நெடுஞ்சாலையான செங்கப்பள்ளி - வாளையாறு ரோட்டில், கணியூரில் சுங்கச்சாவடி உள்ளது. ஆண்டு தோறும், சுழற்சி முறையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரலில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், இன்று (நேற்று) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கணியூர் சுங்க சாவடியில் கார், ஜீப், வேன் களுக்கு ஒரு முறை பயணம் செய்ய, 120 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப, 180 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 4 ஆயிரத்து, ஐந்து ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகுரக சரக்கு வாகனங்கள், மினி பஸ்களுக்கு ஒரு முறை செல்ல, 185 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப, 275 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக, 6 ஆயிரத்து, 160 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பஸ் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு, ஒரு முறை செல்ல, 375 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப, 565 ரூபாயும் மாதத்துக்கான கட்டணமாக, 12 ஆயிரத்து, 210 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை