உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுரையில் வணிகர் சங்க மாநாடு; கோவை வியாபாரிகள் பங்கேற்பு

மதுரையில் வணிகர் சங்க மாநாடு; கோவை வியாபாரிகள் பங்கேற்பு

கோவை:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் இன்று மதுரையில், 41வது வணிகர் தின விடுதலை முழக்க மாநாடு நடக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா தலைமையில், கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் வணிகம் செய்து வரும், 75 வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன், செயலாளர் கணேசன், பொருளாளர் வஹாப், மாநகர செயலாளர் பாக்கியநாதன், கொள்கை பரப்பு செயலாளர் செல்வராஜ், துணை தலைவர் தர்மராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை