உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாம்பு வீடியோ பகிர்ந்த இருவர் கைது

பாம்பு வீடியோ பகிர்ந்த இருவர் கைது

பெ.நா.பாளையம்,:கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இருவரும் வனவிலங்கு பாதுகாப்பு அட்டவணையில் உள்ள இந்திய எலி, பாம்பை உரிய அனுமதியின்றி பிடித்து, வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த அரிய வகை பாம்பு 8 அடி நீளம் கொண்டது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கோவை வனத்துறையினர் இருவர் மீதும், 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்கு பதிந்தனர். இருவரும் கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ganapathy Subramanian
மே 29, 2024 10:35

பாதுகாப்பு அட்டவணையில் உள்ள ஒரு உயிரினத்தை வீடியோ எடுத்தால் தவறா? அதற்க்கு வழக்கு பதிவா?