உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது

பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை, கிழக்கு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் வி.கே.வி., லே-அவுட் திருமூர்த்தி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி,40. இவர், நேற்று முன்தினம் சி.டி.சி., மேடு - வடுகபாளையம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த பத்தரை பவுன் செயினை பறித்துச் சென்றனர்.இது குறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சித்துார் கணக்கம்பாறையை சேர்ந்த அஷ்ரபுதீன்,21, முகமது ரபீ,22, ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், பத்தரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ