உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

கல்லுாரி மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

கிணத்துக்கடவு:கோவை, எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலையில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு மாணவர் ஹரியானாவை சேர்ந்த சுமித்குமார், 21, கெமிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவர் புதுடில்லியை சேர்ந்த அக் ஷத், 20, இருவரும், விடுதியில் தங்கி படிக்கின்றனர்.இரு நாட்கள் பல்கலை விடுமுறை என்பதால், நேற்று மதியம் நண்பரிடம் பைக் வாங்கி, வால்பாறை செல்வதற்கு, கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். பைக்கை சுமித்குமார் ஓட்டினார்.கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவில் பேக்கரி அருகே நின்றிருந்த கார் மீது பைக் உரசியதில், இருவரும் நிலை தடுமாறி, பின்னால் வந்த மற்றொரு காரின் மீது சாய்ந்ததால் துாக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் இறந்தனர். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
ஆக 18, 2024 11:07

ரோட்டை பற்றிய தெளிவு மற்றும் பழக்கம் இல்லாத இடங்களில் வேகமாக செல்ல வேண்டாம்.... ஒரு கார் சாலையின் வலது புறமும் மற்ற இரண்டு கார்கள் இடது புறமும் இருந்தது அதில் ஒரு காரின் பின் சக்கரத்தில் தலைகவசம் சிக்கி.... ஏகப்பட்ட நெரிசல் காவலர்கள் ஒருவர் கூட அந்த இடத்தில் இல்லை... பயணம் ஒருபொழுதும் பந்தயமாகக் கூடாது...


மேலும் செய்திகள்