உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சீருடை

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சீருடை

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆகியன இணைந்து, ராதா கல்யாண மஹோத்ஸவ விழாவை நடத்தி வருகிறது.நேற்று நடந்த இரண்டாம் நாள் விழாவில், ஆதித்யா ரமேஷ் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவையொட்டி துடியலூர் வித்யா விகாசினி வாய்ப்புள்ளி மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மூர்த்தி, வெங்கட நாராயணன், ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி தலைவர் சுந்தரராமன், பாலாஜி, கல்யாண் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை