உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யுனைடெட் கோப்பை வாலிபால் போட்டிகள்

யுனைடெட் கோப்பை வாலிபால் போட்டிகள்

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவனங்களில் சார்பில், யுனைடெட் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்களிடையே நடந்தது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான வாலிபால் போட்டிகளும் நடந்தன. இந்நிகழ்ச்சியில், 33 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.கால்பந்து போட்டியில், முதலிடத்தை கே.பி.எம்., ரத்தினம் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி அணியும், மூன்றாம் இடத்தை விவேகம் பள்ளி அணியும், நான்காம் இடத்தை எஸ்.பி.ஜி., பள்ளி அணியும் பெற்றது. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், முதல் இடத்தை அகர்வால் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் இடத்தை ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும், மூன்றாம் இடத்தை பி.வி.பி., பள்ளி அணியும் பெற்றன.பெண்களுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டியில், முதலிடத்தை இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், இரண்டாம் இடத்தை அகர்வால் பள்ளி அணியும், மூன்றாம் இடத்தை பி.எஸ்.ஜி., கன்னியாகு குருகுலம் பள்ளி அணியும், நான்காம் இடத்தை எஸ்.வி.ஜி., பள்ளி அணியும் பெற்றன.பரிசளிப்பு விழாவில், ரோட்டரி கோயம்புத்தூர் எலைட் தலைவர் மணிகண்டன், செயலாளர் செந்தில் வேலவன், ஜே.எம்.ஜே., ஹவுசிங் லிமிடெட் இயக்குனர் டேவிஸ் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை