மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
2 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
2 hour(s) ago
தேசிய நூலக வார விழா
2 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
2 hour(s) ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வேலாயுதம்பாளையத்தில் உள்ள பொது கிணற்றின் வெளிப்புறத்தை சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தில், 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு விநாயகர் கோவில் வீதியில் பொது கிணறு உள்ளது. இந்த கிணறு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால், கிணற்றின் சுற்று பகுதி முழுவதும் மரங்கள், செடி, கொடிகள் முளைத்து கிணறு தெரியாத அளவுக்கு மறைத்துள்ளது.மேலும், இந்த செடிகளில் பூச்சிகள் மற்றும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. தற்போது பெய்யும் மழையால் கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.ஊராட்சி நிர்வாகம் சார்பில், கிணற்றின் சுற்று பகுதியில் உள்ள செடி மற்றும் மரங்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். அப்பகுதி மக்களுக்கு கிணற்று நீரை வினியோகிக்கலாம். அல்லது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போது, கிணற்று நீரை பயன்படுத்தலாம்.மேலும், விசேஷ நாட்களில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்களுக்கு கூடுதல் தண்ணீர் வினியோகிக்க முடியும். எனவே, கிணற்றின் சுற்று புறத்தை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago