| ADDED : மே 29, 2024 11:58 PM
உடுமலை : உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு போதிய அளவு பஸ்கள் இல்லாததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான வெளியூர் பஸ்களும், டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கானோர் நகரங்கள், கிராமங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.உடுமலையிலிருந்து, கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், இயக்கப்படும் குறைந்த அளவு பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்கின்றனர். எனவே, தொலைதுாரம், எல்லையில் உள்ள கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.