உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிழற்கூரை இன்றி மக்கள் பாதிப்பு

நிழற்கூரை இன்றி மக்கள் பாதிப்பு

உடுமலை : உடுமலை சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் குடியிருப்பு, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.அங்கு, அதிகளவு நுாற்பாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், ரோடு விரிவாக்கத்துக்காக அங்கிருந்த பஸ் ஸ்டாப் நிழற்கூரை சில மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது.மாற்றாக புதிய நிழற்கூரை கட்டப்படவில்லை. இதனால், மழைக்காலத்தில், பயணியர் அப்பகுதியில் நிற்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.எனவே, புதிதாக இடம் தேர்வு செய்து நிழற்கூரை அமைக்க, உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ