உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

கோவை : வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் அனுப்ப ஏ.ஐ.டி.யு.சி., கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., விரிவுபட்ட கவுன்சில் கூட்டம், காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர்நீத்த பொது மக்களுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.வயநாடு சம்பவத்தை, தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி, ஏ.ஐ.டி.யு.சி., சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில், மத்திய அரசை வலியுறுத்த திட்டமிடப்பட்டது.இதற்காக, நாளை (இன்று) பிரதமருக்கு காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து கடிதம் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தங்கவேல்உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை