உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் பற்றாக்குறை போக்க சிறப்பு திட்டம் வேண்டும்

குடிநீர் பற்றாக்குறை போக்க சிறப்பு திட்டம் வேண்டும்

சூலுார்:'ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, சிறப்பு திட்டங்கள் வகுக்க வேண்டும்' என, சூலுார் வட்டார ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூலுார் ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. அதில், 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்டவையாக உள்ளன. இதனால், குடிநீர் தேவை மிக அதிகமாக உள்ளது. குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல், ஊராட்சி நிர்வாகங்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சிகளில் இருந்த மக்கள் தொகை அடிப்படையிலேயே குடிநீர் வழங்கப்படுகிறது. அதனால், மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க முடியாத நிலை ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ளது. தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் குடிநீர் வழங்கினால் தான், பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அதற்கான சிறப்பு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் வகுக்க வேண்டும். சூலுார் ஒன்றியத்துக்கு என, கூடுதலாக கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை