உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல்ல ஓட்டு வாங்க என்னவெல்லாம் பண்றாங்க!

தேர்தல்ல ஓட்டு வாங்க என்னவெல்லாம் பண்றாங்க!

பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அதில், நகராட்சி, 13வது வார்டு கவுன்சிலர் மணிமாலா மற்றும் கட்சியினர், முருகர், இயேசு, மெக்கா மதீனா மசூதி என மூன்று மத கடவுள்களின் படங்களையும், மஞ்சள், சந்தனம், குங்குமம், வெற்றிலை, பாக்கு ஆகியவை எடுத்துச் சென்று, வீடு, வீடாக ஓட்டு சேகரித்தனர்.பொதுமக்களிடம், மஞ்சள், குங்குமத்தை கொடுத்து, துண்டு பிரசுரங்களை வினியோகித்து ஓட்டு சேகரித்தனர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், கட்சிக்கு ஓட்டு கேட்டும் நுாதன பிரசாரம் செய்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.சனாதனம் குறித்து பேசி சர்ச்சை ஏற்படுத்தியும், ராமர் கோவில் கும்பாபிேஷகத்தின் போது, இழிவுபடுத்தும் வகையிலும் கருத்து பதிவிட்ட தி.மு.க.,வினர், ஓட்டு கேட்கும் போது, முருக கடவுள் படத்தை ஏந்தி சென்று பிரசாரம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை