உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 15 நாளுக்கு ஒருமுறையே குடிநீர் கேரள அரசுடன் பேச்சு நடத்தாதது ஏன்?

15 நாளுக்கு ஒருமுறையே குடிநீர் கேரள அரசுடன் பேச்சு நடத்தாதது ஏன்?

கோவை:சிறுவாணி அணையில், 15.78 அடிக்கு தண்ணீர் இருப்பு இருக்கிறது. என்றாலும், நாளொன்றுக்கு 3.5 - 4 கோடி லிட்டரே தண்ணீர் எடுக்க முடிகிறது. கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்தாத ஒரே காரணத்தால், கோவை மக்களுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் கிடைக்கிறது.கோவை நகர்ப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, சிறுவாணி மற்றும் பில்லுார் அணைகளில் இருந்தே தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையின் மொத்த உயரம் - 50 அடி. தற்சமயம், 15.78 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. தமிழகம் - கேரள ஒப்பந்தப்படி, நாளொன்றுக்கு, 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கலாம். ஆனால், கேரள அரசு கட்டுப்படுத்தி வைத்திருப்பதால், 3.5 - 4 கோடி லிட்டர் தண்ணீரே எடுக்க முடிகிறது.பில்லுார் அணையின் மொத்த உயரம் - 100 அடி; தற்சமயம், 62.25 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. இருந்தாலும், நாளொன்றுக்கு, 15 கோடி லிட்டரே எடுக்கப்படுகிறது.கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாளொன்றுக்கு, 28 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், 19 கோடி லிட்டரே கிடைப்பதால், நாளொன்றுக்கு, 9 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக, நகர்ப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, 15 நாட் களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது. அணைகளில் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டு, 15.78 அடிக்கு நீர் இருப்பதாகவும், ஜூலை 7ம் தேதி வரை தண்ணீர் எடுக்க முடியும் எனவும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.கேரள அரசின் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம், பேச்சு நடத்தாமல் மவுனம் சாதித்து வருகிறது. இதுகுறித்து கேட்டால், இரு மாநில அரசுகளின் உயரதிகாரிகள் பேச வேண்டுமென கூறி, துறை அதிகாரிகள் நழுவுகின்றனர்.தேர்தல் சமயத்தில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படக் கூடாது என்பதற்காக, அணையில் போதுமான தண்ணீர் இருக்கிறது; ஜூலை 7 வரை சமாளிக்கலாம் என, சப்பைக்கட்டு காரணம் கூறுகின்றனர் என்பதே உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை