உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்மையை போற்றும் மனைவி நல வேட்பு விழா 

பெண்மையை போற்றும் மனைவி நல வேட்பு விழா 

கோவை;கோவையில் உலக சமுதாய சங்கம் கோவை மண்டல மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், 'மனைவி நல வேட்பு விழா', வடகோவையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நேற்று மாலை நடந்தது. மனவளக்கலை பேராசிரியர் அமுதா ராமானுஜம் துவக்கி வைத்தார்.இது குறித்து, கோவை மனவளக்கலை மன்ற ஆசிரியர் குழு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது:மனைவி என்பவள் வாழ்வில் என்றும் சிறப்பானவள் என்று போற்றவே, இந்த மனைவியர் தின விழா கொண்டாடப்படுகிறது. ஒரு பெண் தாய், மகள், சகோதரி என, பல உறவு நிலைகளில் இருந்தாலும், மனைவி என்ற நிலையில் வரும் போதுதான், நம் வாழ்க்கை சிறப்பான நிலையை அடைகிறது. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில், திருமணம் என்ற பந்தம் உருவான பிறகுதான், எல்லா சிறப்பும் வருகிறது. அதனால் அவர்களை சிறப்பிக்கவே, மனைவி நல வேட்பு விழா கொண்டாடப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் சந்தானகிருஷ்ணன், பொருளாளர் சேதுராமன் மற்றும் 70க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை