உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரடி நடமாட்டத்தால் தொழிலாளர்கள் பீதி

கரடி நடமாட்டத்தால் தொழிலாளர்கள் பீதி

வால்பாறை : வால்பாறை அருகே, தேயிலை எஸ்டேட்டில், உலா வரும் கரடியால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது புதுத்தோட்டம் டீ எஸ்டேட். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை, காட்டுமாடு, சிங்கவால்குரங்கு, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.இந்நிலையில், இந்த எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அருகே, கடந்த சில நாட்களாக கரடி உலா வருகிறது. பகல் நேரத்திலேயே கரடி உலா வருவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுத்தோட்டம் பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுவதால், மாலை நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பகல் நேரத்தில் தனியாக நடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளை கண்டால், அவற்றுக்கு இடையூறு செய்யாமல், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ