உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை தொட்டிகளையே பார்க்க முடியாது! மக்களிடம் விழிப்புணர்வால் நிரந்தர குட்பை

குப்பை தொட்டிகளையே பார்க்க முடியாது! மக்களிடம் விழிப்புணர்வால் நிரந்தர குட்பை

கோவை;மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் இதுவரை, 220 குப்பை தொட்டிகள் குறைக்கப்பட்டு குப்பை கொட்டும், 'ஹாட் ஸ்பாட்' இல்லாத பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காதது என தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகாரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளை 'அவுட் சோர்சிங்' முறையில் தனியார் மேற்கொண்டு வருகின்றனர்.துாய்மை பணியில் 2,129 நிரந்தரம், 4,203 தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு இறுதியில் குப்பை பிரச்னையே, கவுன்சிலர்கள் மத்தியில் பிரதானமாக இருந்தது.இதையடுத்து, 'ரூட் சார்ட்' போடப்பட்டு பொது இடங்களில் குப்பை அகற்றப்படுவதுடன், குப்பையை சரியாக தரம் பிரித்து வாங்கி, குப்பை தொட்டிகளை குறைக்கும் நடவடிக்கையிலும் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.அந்த வகையில், மேற்கு மண்டலத்தில் ஒரு டன் அளவுடைய, 50 குப்பை தொட்டிகள், இரண்டு டன்னுடைய, 20 குப்பை தொட்டிகள், அரை டன்னுடைய, 150 குப்பை தொட்டிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. இதனால், பொது வெளியில் குப்பை கொட்டுவதே குறைந்துவிட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் கூறியதாவது:மேற்கு மண்டலத்துக்குட்பட்ட, 20 வார்டுகளில் மக்களிடம் சரியாக தரம் பிரித்து வாங்குவதால் தினமும், 50 டன்களாக சேகரிக்கப்பட்ட, 'மிக்ஸ்டு வேஸ்ட்' 40 டன்களாக குறைந்துள்ளது. குப்பை தொட்டிகளின் அளவையும், பெரும்பாலும் குறைத்து விட்டோம். 20 லாரிகள் ஓடிக்கொண்டிருந்த மண்டலத்தில் தற்போது, 9 லாரிகள் மட்டுமே குப்பை சேகரிக்கின்றன. கோவில்கள் இருக்கும் இடத்தில் மட்டும், குப்பை தொட்டிகள் வைத்துள்ளோம்.குப்பை கொட்டப்படும் 'ஹாட் ஸ்பாட்'களும் கண்டறியப்பட்டு, குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுவதும், மக்களிடம் விழிப்புணர்வு காரணமாக குறைந்துவிட்டது. இன்னும் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டிகளும் படிப்படியாக குறைக்கப்படும் என்பதால், மேற்கு மண்டலம் குப்பை மேலாண்மையில், இதர மண்டலங்களுக்கு முன் உதாரணமாக சிறந்து வருகிறது எனலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை