உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீண்டும் வேலை கேட்டு கோரிக்கை

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீண்டும் வேலை கேட்டு கோரிக்கை

கோவை; 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தங்களுக்கு சட்டப்படியான, 8 மணி நேர வேலை, பாதுகாப்பான, சுத்தமான பணியிட வசதி. ஆண், பெண் தொழிலாளிகளுக்கு தனி அறை வசதி, ஓய்வு அறை, கழிவறை வசதிகள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகன பராமரிப்பில் கொள்ளை, உதிரிபாகங்களில் கொள்முதல் திருட்டு என பொதுமக்களின் வரி பணத்தை சுரையாடும் அதிகாரிகளின் திருட்டை தடுத்து, உயிர் காக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையை, உயரிய சேவையாக செயல்படுத்திட வேண்டும்.அதிகாரிகளின் திருட்டை அம்பலப்படுத்தியதற்காகவும், அரசிடம் புகார் தெரிவித்தற்காகவும், தொழிற்சங்கம் அமைத்ததற்காகவும் அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாக, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, மீண்டும் வேலை வழங்கிட, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ