உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

வனபத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா, கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்வு கடந்த, 30ம் தேதி நடந்தது. இதையடுத்து இன்று வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தனசேகர், கண்ணன் ஆகிய குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருவிளக்கு பூஜையை நடத்தினர். இதில்,108 பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை