உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆர்ப்பாட்டம் நடத்திய 135 அரசு ஊழியர் கைது

 ஆர்ப்பாட்டம் நடத்திய 135 அரசு ஊழியர் கைது

கோவை: பனிரெண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்,கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்திலும் மறியலில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் கைது செய்தனர். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்துதல், பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் ஊர்ப்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியருக்கு சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு பென்சன், அரசு ஊழியர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்துதல் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் மறியலிலும் ஈடுபட்ட 35 பெண்கள் உள்ளிட்ட 135 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி