உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தர்மசாஸ்தா கோவிலில் 14ம் ஆண்டு விழா

 தர்மசாஸ்தா கோவிலில் 14ம் ஆண்டு விழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, மெட்டுவாவி தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று, ஆண்டு விழா சிறப்பு வழிபாடு நடந்தது. கிணத்துக்கடவு, மெட்டுவாவி தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு விழா நிகழ்ச்சி, கடந்த நவ., 30ம் தேதி, வள்ளி கும்மியுடன் துவங்கியது. கடந்த, 1ம் தேதி காலையில், சபரிமலை மேல்சாந்திகளான சசி நம்பூதிரி, தாமோதரன் மற்றும் பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில், ஐயப்ப சுவாமி தேர் வீதி உலா நடந்தது. நேற்று, 2ம் தேதி, காலையில், ஆண்டு விழா யாக வேள்வி பூஜை நடந்தது. மதியம், சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தரிசன பூஜைகள் நடந்தது. இதில், ஐயப்ப பக்தர்கள் மற்றும் மெட்டுவாவி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, 3ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, சுவாமிக்கு ஊஞ்சல் அலங்காரம் மற்றும் கார்த்திகை தீப ஜோதி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ