| ADDED : மார் 18, 2024 12:50 AM
போத்தனூர்;மதுக்கரை சுற்றுப்பகுதிகளில், 15.7 லட்சம் ரூபாய் ரொக்கம், கண்காணிப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து,நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வேலந்தாவளம் சோதனைச்சாவடி அருகே கிணத்துக்கடவு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ் தலைமையிலான குழுவினர், கண்காணிப்பில் ஈடுட்டனர். அவ்வழியே பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் மதுக்கரையை சேர்ந்தஅஜித், 21 என்பதும், ஆவணங்களின்றி இரண்டு லட்சத்து,96 ஆயிரத்து, 970 ரூபாய் கொண்டு செல்வதும் தெரிந்தது. ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுக்கரையில்...
மதுக்கரை குவாரி ஆபீஸ் அருகே, சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாட்ஷா தலைமையிலான குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அவர் செல்வபுரம், சி.ஜி.வி.நகரை சேர்ந்த முஸ்தபா என்பதும், முறையான ஆவணங்களின்றி, 12.74 லட்சம் ரூபாய் வைத்திருப்பதும் தெரிந்தது. ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.