ஓரியன் டிராபி கூடைப்பந்து போட்டி: மினி பாய்ஸ் பிரிவில் 16 அணிகள் களம்
கோவை; மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடந்துவரும் 'ஓரியன் டிராபி' போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,-ஏ அணி, 73-10 என்ற புள்ளிகளில், மெர்சி பி.பி.ஏ., அணியை வென்றன.நேரு ஸ்டேடியம் அருகே மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில், 15வது 'ஓரியன் டிராபி' கூடைப்பந்து போட்டி கடந்த, 16ம் தேதி முதல், 23ம் தேதி வரை நடக்கிறது.இதில், மினி பாய்ஸ் பிரிவில், 16 அணிகள், மினி கேர்ள்ஸ் பிரிவில், 8 அணிகள், மென்ஸ் பிரிவில், 27 அணிகள் பங்கேற்றுள்ளன.'மினி பாய்ஸ்' பிரிவுக்கான முதல் போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., அணி, 98-4 என்ற புள்ளி கணக்கில் ஆர்.எஸ்.சி., அணியையும், பாரதி அணி, 61-53 என்ற புள்ளிகளில் மெர்சி பி.பி.ஏ-ஏ அணியையும், பீப்பால் அணி, 17-10 என்ற புள்ளிகளில், டெக்ஸ்சிட்டி-பி அணியையும் வென்றன.டெக்ஸ்சிட்டி-ஏ அணி, 40-23 என்ற புள்ளிகளில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,-பி அணியையும், பேசன் பொள்ளாச்சி அணி, 90-4 என்ற புள்ளிகளில் சர்வஜன-பி அணியையும், சர்வஜன-ஏ அணி, 68-9 என்ற புள்ளிகளில் பி அண்டு ஒய் பி.பி.சி., அணியையும், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,-ஏ அணி, 73-10 என்ற புள்ளிகளில், மெர்சி பி.பி.ஏ., அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.