உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு விமானவியல் கல்லுாரியில் 17வது பட்டமளிப்பு விழா

நேரு விமானவியல் கல்லுாரியில் 17வது பட்டமளிப்பு விழா

கோவை, பிப்.28 -குனியமுத்துார், நேரு விமானவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லுாரியில்,17வது பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, அழகப்பா பல்கலையின் துணைவேந்தர் ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.விழாவிற்கு தலைமை வகித்த, நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், ''தமிழ்நாட்டிலேயே விமானவியல் துறையில் 50 வருடங்களைக் கடந்து என்றும் பல சாதனையாளர்களை உருவாக்குவதில், நேரு கல்வி குழுமம் முதன்மை பங்களிப்பதில் பெருமை கொள்கிறது,'' என்றார்.நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நாகராஜா, முதல்வர் பாலாஜி மற்றும் துறைத்தலைவர்கள் சிங்காரவடிவேலு, மல்லிகா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ