டான்டீயில் 20 சதவீத போனஸ்
வால்பாறை: வால்பாறை டான்டீ தொழிலாளர்ளுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து, வால்பாறை (சின்கோனா), நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் 'டான்டீ' தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இதனால், 'டான்டீ' தோழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.