உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு கலை கல்லுாரியில் 22வது பட்டமளிப்பு விழா

நேரு கலை கல்லுாரியில் 22வது பட்டமளிப்பு விழா

கோவை;திருமலையம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 22ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. நேரு கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், செயலர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சி.எம்.ஆர்,, பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஆனந்த் ஜோஷி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.2019 -2022ம் கல்வியாண்டில், இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவில் பயின்ற, 918 மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்லுாரியளவில் இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவில் முதல் பத்து இடங்களை பிடித்த, 93 மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் முனைவர் அனிருதன், ஆடை வடிவமைப்புத் துறை தலைவர் ஜெயப்பிரியா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை