உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.3.5 கோடியில் தயாராகிறது ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி துவங்கியது

ரூ.3.5 கோடியில் தயாராகிறது ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணி துவங்கியது

கோவை:கோவை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் 3.5 கோடி ரூபாயில் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப்பணிகள் நேற்று துவங்கியது.கோவை சத்தி சாலையிலுள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தங்கும் அறை, நடைபாதை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி விரிவுபடுத்த,ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கோவை சத்திசாலை புதிய மேம்பாலம் அருகே ஆம்னி பஸ் ஸ்டாண்ட், 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.பஸ்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் தொடர்ந்து இடநெருக்கடியை சந்தித்து வந்தது. ஆம்னி பஸ் ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, நடைபாதை, தங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''ஆம்னி பஸ் ஸ்டாண்டை 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க உள்ளோம். கழிப்பறை, நடைபாதை, மேற்கூரை, தங்கும் அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை என பல்வேறு வசதிகள் ஏற்படுத்த உள்ளோம். தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகிறது,'' என்றனர். கோவை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: ஆம்னி பஸ் ஸ்டாண்ட், 2008ல் அமைக்கப்பட்டது. அப்போது உருவாக்கப்பட்ட 'டிசைன்'. தற்போதைய சூழலுக்கு பொருந்தாது. தற்போது ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப பஸ் ஸ்டாண்டைமேம்படுத்த வேண்டும். தற்போது 40 பஸ்கள் மட்டுமே நிறுத்த முடியும்; ஆனால், 200 பஸ்கள் தினமும் வந்துசெல்கின்றன. அதற்கேற்ப அமைக்கப்பட வேண்டும். நவீனமாக வடிவமைக்கப்பட்ட பஸ்களை திருப்ப முடிவதில்லை. மாநகராட்சிக்கு சொந்தமான இடம் அருகாமையில் உள்ளது. இதை விரிவுபடுத்தி, தேவையான வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை