நேரு சர்வதேச பள்ளியில் 4ம் ஆண்டு விளையாட்டு விழா
கோவை: கோவை நேரு சர்வதேச பள்ளியின் நான்காம் ஆண்டு விளையாட்டு விழா, நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர். பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயலாளர் கிருஷ்ணகுமார் பேசுகையில், ''சிறு வயது முதலே விளையாட்டில் ஈடுபடுவது மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். விளையாட்டு வீரர்களுக்கு, ஸ்போர்ட்ஸ் கோட்டா வாயிலாக அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது, '' என்றார். நேரு சர்வதேச பள்ளி மற்றும் நேரு கிட்ஸ் அகாடமி தாளாளர் சைதன்யா, முதல்வர் சிவா பிரகாஷ், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.