உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா விற்ற 5 பேர்  கைது

கஞ்சா விற்ற 5 பேர்  கைது

கோவை: கோவையில், கஞ்சா விற்ற, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், தியாகி குமரன் வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கோவில் அருகில் கஞ்சா விற்றதாக பூ மார்க்கெட் காளிதாசன்,26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 565 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, புலியகுளம் கல்லறை தோட்டம் அருகில் கஞ்சா விற்ற ஏரிமேட்டை சேர்ந்த இளங்கோவன்,24, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 160 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பீளமேடு போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்றதாக உக்கடம், புல்லுக்காடு கமலேஷ்வரன்,24, சவுரிபாளையம் செல்வராஜ்,24, மித்திலேஷ்,24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, ஒரு கிலோ 850 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை