மேலும் செய்திகள்
அசோகபுரி கிராமத்தில் ரத்ததான முகாம்
08-Jan-2025
அன்னுார், ; அன்னுாரில் நடந்த முகாமில், 52 பேர் ரத்த தானம் செய்தனர்.மேட்டுப்பாளையம் அரசு ரத்த வங்கி, பொகலுார் ஆரம்ப சுகாதார நிலையம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் 6வது வார்டு பொதுமக்கள் சார்பில், ரத்ததான முகாம், அன்னுாரில் நடந்தது. முகாமை பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் துவக்கி வைத்தார்.முகாமில் டாக்டர் ராம் தீபிகா தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் செய்தனர். 52 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் முகாமில் விநியோகிக்கப்பட்டன. ரத்ததானம் செய்தோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜுன், நிர்வாகிகள் நாகராஜ், மனோஜ், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
08-Jan-2025