உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  7 மாதத்தில் 6,736 டன் காய்கறி விற்பனை: உழவர் சந்தையில் விற்பனை படுஜோர்

 7 மாதத்தில் 6,736 டன் காய்கறி விற்பனை: உழவர் சந்தையில் விற்பனை படுஜோர்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 7 மாதங்களில் ரூ.29.88 கோடிக்கு காய்கறிகள் விற்பனை ஆகியுள்ளது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இச்சந்தையில் 78 கடைகள் உள்ளன. மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து, விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தக்காளி, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், பீட்ரூட், கீரை, பழங்கள் என 70க்கும் மேற்பட்ட ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள், வெளி மார்க்கெட்டுகளை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் கிடைப்பதாலும், தரமாக கிடைப்பதாலும், காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் உழவர் சந்தையில் அதிகரித்து வருகிறது. இச்சந்தையில் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மேட்டுப்பாளையம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வினோத்குமார் கூறியதாவது: மேட்டுப்பாளையம் உழவர் சந்தைக்கு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து, காய்கறிகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. வெளி மார்க்கெட்டுகளை ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கு லாபம் கிடைக்கும். கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் வரை 15 ஆயிரத்து 480 விவசாயிகள் வருகை புரிந்துள்ளனர். அவர்கள் வாயிலாக விற்பனைக்கு 6 ஆயிரத்து 736 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.29.88 கோடி ஆகும். 8 லட்சத்து 98 ஆயிரத்து 231 வாடிக்கையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 940 டன் காய்கறிகள் வந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.4.48 கோடி ஆகும். 1 லட்சத்து 25 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளும் விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ