90 சதவீதம் அரசு காரணம்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது முற்றிலும் உண்மை. 90 சதவீதம் குற்றங்களுக்கு அரசு மட்டுமே காரணம். பல பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. மது, போதைப்பொருட்கள் தான் இதற்கு முக்கிய காரணம். அரசு இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - இளங்கோவன் சுயதொழில், பெ.நா.பாளையம்:'பெண்களும் காரணம்' பெண்கள் பாதுகாப்பு குறைபாடுக்கு, பெண்களும் ஒரு விதத்தில் காரணமாக உள்ளனர். நாம் சரியாக இருந்தால், எதற்கும் பயப்படத் தேவையில்லை. நமது நடவடிக்கைகளை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். - ஆலிஸ் சுயதொழில், பாப்பநாயக்கன்பாளையம்'கேரளாவில் சட்டங்கள் கடுமை' தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்களை கேள்விப்படுகிறோம். கேரளாவில் சட்டங்கள் கடுமையாக உள்ளன. அங்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடக்க, சட்டங்கள் கடுமையாக இருப்பதே காரணம். - ஜூனா தாமஸ் இல்லத்தரசி, சாலக்குடி