உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள முதலை; வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி பிடித்தனர்

வாழைத்தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள முதலை; வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி பிடித்தனர்

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே காந்தையூரில் வாழைத்தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே காந்தையூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 45. இவர் தனது விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு உள்ளார். நேற்று காலை சுமார் 6.30 மணிக்கு வழக்கம் போல, தமிழ்ச்செல்வன் தனது விவசாய நிலத்திற்கு வந்து வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வாழை மரங்களுக்கு இடையே சுமார் 12 அடி நீளமுள்ள முதலை ஊர்ந்து வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வன், சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்தார். காலை 7.30 மணி அளவில் வந்த வனச்சகர் மனோஜ் குமார் மற்றும் அவரது தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முதலையை சுற்றி வளைத்து, அதன் மீது ,நாட் அமைக்கப்பட்ட கயிற்றினை வாய் பகுதிக்கு கொண்டு சென்றனர். பல முறை முதலை அதனை தட்டிவிட்ட நிலையில் சுமார் 11.30 மணி அளவில் நாட் பகுதி முதலையின் வாயை பிடித்து கொண்டது. பின் முதலையின் கண்களை மறைக்கும் விதமாக, முதலையில் முகத்தில் சாக்கு போடப்பட்டன. பின் முதலையின் வால், கால்கள் கட்டப்பட்டன. இதையடுத்து பிடிபட்ட முதலையை கொண்டு செல்ல வனத்துறை சார்பில் கூண்டு வைத்த வாகனம் வரவழைக்கப்பட்டது.முதலையை அந்த வாகனத்தில் ஏற்றி, பவானிசாகர் அணையின் நீர் தேக்கப் பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.இதுகுறித்து சிறுமுகை வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோடை காலம் தொடங்கும் முன்னரே வெயில் அதிகரித்துள்ளது. நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பவானி ஆறும் வறண்டு வருகிறது. இதனால் தண்ணீரை தேடி முதலைகள் இது போன்று வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை