உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க!

ஆடு, கோழி வளர்ப்போருக்கு புதிதாக சங்கம் துவங்கறாங்க!

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில், கால்நடைத்துறை வாயிலாக, ஆடு மற்றும் கோழி வளர்ப்போருக்கு தனித்தனியாக புதிதாக சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தில், 39 கால்நடை மருந்தகங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு மருந்தகத்துக்கும் உட்பட்ட பகுதியிலும், தலா ஒரு ஆடு வளர்ப்போர் சங்கம், கோழி வளர்ப்போர் சங்கம் ஏற்படுத்தப்பட உள்ளது. சங்கம் அமைப்பதன் வாயிலாக, ஆடு, கோழி வளர்ப்போர், தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வதுடன், அரசு திட்டங்கள் மற்றும் கடன் உதவிகளை எளிதாக பெற முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சங்கத்திற்கு கால்நடை உதவி டாக்டர்கள், நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த கால்நடை மருந்தகத்தின் வாயிலாக தங்கள் பதிவை உறுதி செய்து கொள்ளலாம். ஒரு சங்கத்தில், 25க்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படுவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை