உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த செயற்கைகோள்

வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த செயற்கைகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி : 'அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருவதால், இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள், மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது. என, 'சந்திராயன் 3' திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்தார். ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரியில், அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், 'விண்வெளியில் இந்தியா'என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் 'சந்திராயன் 3' திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்று, மாணவர்களிடம் பேசினார்.நிருபர்களிடம் கூறுகையில், 'அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை ஊக்கவிக்கும் வகையிலும், விண்வெளி அறிவியல் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், இந்நிகழ்ச்சி நடத்தபடுகிறது. இஸ்ரோ சார்பில், தகவல் தொடர்பு, வானிலை மற்றும் ஜி.பி.ஆர்.எஸ், செவ்வாய் கிரகம், ஆகியவற்றை ஆய்வு செய்ய கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருவதால், இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள், மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது. 'சந்திராயன் 3' செயற்கைக்கோள் லேண்டர் மற்றும் ரோவர் அடங்கியது. தற்போது, அதன் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. இந்த செயற்கைக்கோள் விண்ணிற்கு செலுத்தப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது. இந்த திட்டத்தில் மற்றொரு சாதனையாக லேண்டர் எந்த இடத்தில் தரையிறக்கபட்டதோ, அந்த இடத்தில் இருந்து, வேறொரு இடத்திற்கு அதே எஞ்சின் மூலம் கொண்டு செல்லப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டது.இதில் இருந்து பெறப்படும் தகவல்கள் பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balaji
பிப் 11, 2024 21:45

அறிவியல் சாராத செயற்கைகோள் என்று ஏதாவது உள்ளதா? என்ன சொல்லவருகிறார் இவர்?


VSaminathan
பிப் 11, 2024 07:34

மாணவர்களை ஊக்கப்படுத்துவது கிடக்கட்டும்-முதலில் இவர்கள் ஏவும் ராக்கெட்டுகளையும் செயற்கை கோள்களையும் சரியான இடத்தில் நிலைப்படுத்தட்டும்-ஒரு தொலைதொடர்பு நிறுவனம் கூட சரியான தொடரிணைப்பை வழங்குவதில்லை-காலை 8 மணி முதல் 11 மணி வரை ஒரே ரகளை தான்,அதே போல இரவு 8மணி முதல் 9 அரை வரை தொல்லைதான்-அம்பத்மில் 74/-ரூ மாதத்திற்கென இருந்த கடடணம் இப்போது240/-ரூ-ஆனால் சேவை படுமோசம்-எனவே விஞ்ஞானிகள் நேரே விண்வெளி ஆராய்ச்சி கூடத்திலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு சென்று தங்கள் பெருமையை பீற்றிக்கொள்வது படுகேவலம்-முதலில் மக்களுக்கான உரிமைகளை-நல்ல வாழத்தகுந்த வசதிகளை ணெய்து கொடுக்கப் பாடுபடுங்கள்-பின்னர் உங்கள் பெருமையை அவர்களே பேசுவார்களே, +2 படிக்கும் மாணவனிடம் வந்து ராக்கெட் விடுவதைப் பற்றி பேச அவனுக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? இந்தியாவின் சாபக்கேடே இந்த பெருமைதான்-நம்மிடம் திறமை உண்டாயின் அதை வெளியில் உள்ளவர்கள் புகழ்ந்து பேச வேண்டுமென்றானே பாரதி-அதுவே உண்மை-ரெண்டு ராக்கெட் லாஞ்ச் பண்ணிட்டானுகன்னா உடனே ஓடி வந்து திராவிடன் ஆரியன்னு கதை விடறது


RAMAKRISHNAN NATESAN
பிப் 11, 2024 09:53

இவரைப்பற்றி இனிதான் தெரியும் ......


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை