உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டின் மீது விழுந்த மரம்

வீட்டின் மீது விழுந்த மரம்

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக குந்தாவில், 6.5 செ.மீ., கின்னக்கொரையில், 6.3 செ.மீ., எடப்பள்ளியில், 4.0 செ.மீ., கீழ் கோத்தகிரி, 3.9 செ.மீ., பர்லியாரில் 5.9 செ.மீ., மழையளவு பதிவானது. இந்நிலையில், குன்னுார் காந்திபுரம் -காட்டேரி இடையே நள்ளிரவில் பிரபு என்பவரின் வீட்டின் மீது மரம் விழுந்ததில் குடும்பத்தினர், 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குன்னுார் தீயணைப்பு துறை யினர்; ஊர் மக்கள், 5 மணி நேரம் போராடி மரத்தை வெட்டி அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை