உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடிஷியா பிராண்ட் துாதராக நடிகை திரிஷா நியமனம்

அடிஷியா பிராண்ட் துாதராக நடிகை திரிஷா நியமனம்

கோவை; கோவை மாநகரின் அதிக நம்பிக்கைக்குரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான, அடிஷியா நிறுவனத்தின் பிராண்ட் துாதராக, நடிகை திரிஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அடிஷியா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிட்., கோவையை தலைமையிடமாக கொண்டு, வேகமாக வளர்ந்து வரும் ஒரு ரியல் எஸ்டேட் பிராண்டாகும். தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும், ரியல் எஸ்டேட் உருவாக்கத்தில் நம்பகத்தன்மை, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை திருப்திகரமாக பூர்த்தி செய்வது மற்றும் தரமான சேவைகளை வழங்குவது என, அடிஷியா நிறுவனம் மக்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளது. இந்நிறுவன பிராண்ட் துாதராக நடிகை திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.நிர்வாக இயக்குனர் மணிகண்டன் கூறுகையில், ''இரண்டு ஆண்டுகளில், ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் என்ற இலக்கை அடைவதற்கான, பணிகளை துவங்குகின்ற நிலையில், எமது பிராண்ட் துாதராக நடிகை திரிஷா இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை