உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டயாலிசிஸ் மிஷின்

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டயாலிசிஸ் மிஷின்

பொள்ளாச்சி;நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்க, அரசு மருத்துவமனை சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மண்டல மருத்துவமனையாக உள்ளதால், கோவை அரசு மருத்துவமனைக்கு, தினமும் பல ஆயிரம் நோயாளிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.இதைக்கருத்தில் கொண்டு கடந்தாண்டு, கூடுதலாக டயாலிசிஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. இருப்பினும், நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மருத்துவமனையில், 22 டயாலிசிஸ் கருவிகளுடன் கூடிய, சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.இப்பிரிவுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள் தவிர, வெளியில் இருந்து வரும் நோயாளிகளுக்கும், சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதுமான கருவிகள் இல்லை.டீன் நிர்மலா கூறுகையில், ''தற்போது, 22 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதலாக கருவிகள் வழங்க கோரப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை