உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலக்கடலைக்கு கூடுதல் விலை

நிலக்கடலைக்கு கூடுதல் விலை

அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பாண்டில் நிலக்கடலை ஏல விற்பனை நேற்று நடந்தது. அன்னுார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் 753 கிலோ நிலக்கடலை விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ நிலக்கடலை குறைந்தபட்சம் 68 ரூபாய் முதல் அதிகபட்சமாக 75 ரூபாய் 16 பைசாவுக்கு விற்பனையானது. நிலக்கடலைக்கு கூடுதல் விலை கிடைத்ததாக விவசாயிகள் கூறினர். இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை