உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மானிய விலையில் சோளம் விதை பெற வேளாண் துறை அழைப்பு

 மானிய விலையில் சோளம் விதை பெற வேளாண் துறை அழைப்பு

காரமடை: மானிய விலையில் சோளம் விதைகளை பெற்று பயனடைய, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி கூறியதாவது: காரமடை வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் 1,100 கிலோ சோளம் விதை கையிருப்பு உள்ளது. தற்சமயம் ராபி பருவமழை பெய்து வருகின்றது. எனவே விவசாயிகள் சோளம் விதைகளை, மானிய விலையில் பெற்று பயன்படுத்தி கொண்டு பயனடைய வேண்டும். சோளம் விதைக்கு ஒரு கிலோ ரூ.30 மானியமாக வழங்கப்படும். இது ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம்- சிறுதானியங்கள், என்னும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. உயிரி பூச்சிக்கொல்லி காரணிகளான டிரைக்கோ டெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் இடுபொருட்களும், முறையே 750 மற்றும் 250 கிலோ கையிருப்பில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை