வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வேகத்தடை ஒரு விபத்துக்கு காரணம் ஆகி விடக்கூடாது.அந்த இடத்தில் நிறக் குறியீடு தேவை.மின் மினுக்கும் சிகப்பு விளக்கு பொறுத்துதல் அவசியம்
கோவை: அவிநாசி ரோடு ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், வாகன ஓட்டிகள் சிலர், 100 கி.மீ. வேகத்தை கடந்து செல்வதால், பாலத்தில் செல்லும் மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன், 160 கி.மீ. வேகத்தில் காரில் சென்ற மூவர், கோல்டுவின்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, நின்றிருந்த லாரியில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்தது. இதற்காக, உப்பிலிபாளையம், கோல்டுவின்ஸ் மற்றும் சுகுணா கல்யாண மண்டபம், ஜி.டி. மியூசியம், ஹோப் காலேஜ், அரவிந்த் கண் மருத்துவமனை இறங்கு தளங்கள் என, ஆறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் இருந்து இறங்கும் பகுதிகளில், அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத்தை தாண்டக்கூடாது என்றும், 'வேகத்தடை உள்ளது; மெதுவாகச் செல்லவும்' என்றும் எச்சரிக்கை பலகைகள் நடப்பட்டுள்ளன. 'வேகத்தை கண்காணிக்க ஏ.ஐ. கண்காணிப்பு கேமராக்கள், போலீசாரால் நிறுவப்படும்' என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.
வேகத்தடை ஒரு விபத்துக்கு காரணம் ஆகி விடக்கூடாது.அந்த இடத்தில் நிறக் குறியீடு தேவை.மின் மினுக்கும் சிகப்பு விளக்கு பொறுத்துதல் அவசியம்